2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பொத்துவில் ஆண்கள் அரபிக் கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பொத்துவில் 20 வீட்டுத்திட்டத்தில் அமையப்பெற்ற ஆண்கள் அரபிக் கல்லூரிக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கல்லூரிக் கட்டட நிர்மாணப் பணிக்காக 01 இலட்சம் ரூபாய் தருவதாக வாக்குறுதியளித்தார்.

பொத்துவில் பிரதேச சபை தவிசாளரின் அழைப்பை ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.றகீம் ஆகியோர் விஜயத்தை மேற்கொண்டு கல்லூரியில் நிலவும் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X