Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் லங்கா சதொச விற்பனை நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளை வர்த்தக, கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிசாட் பதியுதீன் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையத்தை திறப்பதற்கு உத்தேசித்துள்ள அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கக் கட்டடம் தொடர்பான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக லங்கா சதொச நிறுவனத்தின் பணிப்பாளர் சீ.எம்.முபீத், சதொச நிறுவனத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய முகாமையாளர் எஸ்.திவாகரன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் எஸ்.எம்.இக்பால், பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் எ.எல்.எ. இர்பான் மற்றும் பொது முகாமையாளர் எம்.வஹாப் ஆகியோர் குறித்த இடத்தை வியாழக்கிழமை (02) பார்வையிட்டனர்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் லங்கா சதொச விற்பனை நிலையத்தை திறந்து தருமாறு பொது மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் எஸ்.எம்.இக்பால் வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் விடுத்த வேண்டுகோளின்பேரில் சதொச நிலையம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
03 Oct 2025