2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

திவிநெகும பயனாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும்

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

புதிய அரசாங்கத்தின் தேர்தல் கால வாக்குறுதிக்கமைய, திவிநெகும பயனாளிகளுக்கான கொடுப்பனவு இம்மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, திவிநெகு அபிவிருத்தி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக, இந்த அதிகரித்த கொடுப்பனவு ஒருவர் அல்லது இருவரைக் கொண்ட குடும்பத்துக்கு 2,250 ரூபாயும் மூன்று பேரைக் கொண்ட குடும்பத்துக்கு 3,600 ரூபாயும் நான்கு பேர் அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்துக்கு 4,500 ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

இந்தக் கொடுப்பனவுகளில் 2,250 ரூபாய் பெறுபவர்கள் கட்டாயச் சேமிப்பாக 100 ரூபாயும் சமூகப்பாதுகாப்பு நிதியாக 75 ரூபாயும் வீட்டு சீட்டிழுப்புக்காக 10 ரூபாயுவும் செலுத்த வேண்டும். மிகுதியாவுள்ள 2,065 ரூபாயை திவிநெகு சமுதாய அபிவிருத்தி வங்கியில் பெற்றுக் கொள்ள முடியும்.

இதேபோன்று 3,600 ரூபாய் பெறுபவர்கள் கட்டாயச் சேமிப்பாக 200 ரூபாயும் சமூகப்பாதுகாப்பு நிதியாக 75 ரூபாயும் வீட்டு சீட்டிழுப்புக்காக 10 ரூபாயும் செலுத்த வேண்டும். மிகுதியாகவுள்ள 3,315 ரூபாயை  திவிநெகு சமுதாய அபிவிருத்தி வங்கியில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் 4,500 ரூபாயை பெறுபவர்கள் கட்டாயச் சேமிப்பாக 300 ரூபாயும் சமூகப்பாதுகாப்பு நிதியாக 75 ரூபாயும், வீட்டு சீட்டிழுப்புக்காக 10 ரூபாயும் செலுத்த வேண்டும். மிகுதியாகவவுள்ள 4,115 ரூபாயை திவிநெகு சமுதாய அபிவிருத்தி வங்கியில் பெற்றுக் கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X