2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

உடற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சின் அனுசரணையுடன், அமைக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையம் வியாழக்கிழமை(02) திறந்து வைக்கப்பட்டது

உள்ளூராட்சி மன்றங்களில், ஆசியான் மன்றத்தின் செயத்திட்டத்துக்கு அமைவாக, கொய்க்கா நிறுவனத்தினால் கொரிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அக்கரைப்பற்று மாநகரசபையின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன், இந்த உடற்பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று மாநகரசபையின் ஆணையாளர், ஏ.எல்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அக்கரைப்பற்று மாநகரசபையின் முதல்வர் அஹமட் சக்கி அதாவுல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து உடற்பயிற்சி நிலையத்தைத்  திறந்து வைத்தார்.

நிகழ்வுக்கு ஆசியான் மன்றத்தின் பிரதிப்பணிப்பாளர் திரு.ஏ.சுபாகரன் மற்றும் ஆசியான் மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரிகளான எம்.ஐ.எம்.வலீத்,சீ.சசிகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X