2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு நடத்துவதில் சிக்கல்

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் 2013ஃ2014 ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றது.

பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஐ.எம்.பாஹிம் தலைமையில் பாடசாலை கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாலில், சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்களும் கற்பித்துக்கொடுத்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, கூட்டத்தில் எந்தவிதமான முடிவுகளும் எடுக்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வை எதிர்வரும் புதன்கிழமை (08) நடத்துவதற்கு ஆசிரியர் குழாம் திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்த நிகழ்வை நடாத்துவதற்கு பெற்றோரின் பங்களிப்பு அவசியம் என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த பெற்றோர் ஆசிரியர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெற்றோரின் பங்களிப்பு அவசியம் என்று பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஐ.எம்.பாஹிம் பெற்றோர்களிடம் வேண்டிக்கொண்டதையடுத்து கூட்டத்துக்கு வந்திருந்த பெற்றோர் இத்தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

'பாடசாலை ஆசிரியர் குழாமில் உள்ளவர்கள் நிகழ்வுக்கான திகதியை முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு கூறவேண்டும் என்பதற்காக இந்த கலந்துரையாடலை நடத்துகின்றார்கள். இந்த தீர்மானத்தை எந்த காரணம் கொண்டும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த பாராட்டு நிகழ்வு பெற்றோர்களின் முழு ஆதரவையும் பெற்றே நடாத்தப்படவேண்டும். அவ்வாறில்லாமல் ஆசிரியர்களின் நலனுக்காக மாத்திரம் விரும்பிய தினத்தில் நடத்த முடியாது என்று பெற்றோர் தெரிவித்தனர்.

மேலும் நாம் அனைவரும் தூர இடங்களில் அரசாங்க தொழில் செய்கின்றவர்கள் என்ற காரணத்தினால் அதற்கான விடுமுறையை பெற்றுக்கொள்வது மிகவும் கடினமாக விடயமாகும்.

இதுவே இதுவொரு விடுமுறை தினத்தில் நடத்தப்படுமாயின் எமக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இருக்காது என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எனவே ஆசிரியரால் எடுக்கப்பட்ட திகதியை மாற்றியமைக்கவேண்டும். இல்லையென்றால் இந்நிகழ்வுக்கு நாங்களோ எங்களது பிள்ளைகளோ வரப்போவதுமில்லை என்றும் கருத்துகள் வெளியிடப்பட்டன.

இதை ஏற்றுக்கொள்ளாத பிரதி அதிபர், கலந்துரையாடல் நிகழ்வின் இடைநடுவில் புறக்கணிப்பு செய்துவிட்டு வெளியேறிச்சென்றுள்ளார் என்றும் பிரதி அதிபரை பலமுறை அலைபேசி மூலம் தொடர்பு கொள்ளமுயற்சித்த போதிலும் அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்று பெற்றோர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X