2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

புதிய மாணவிகள் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

ஒலுவில் ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரிக்கு 2015-2016ஆம் ஆண்டு புதிய மாணவிகள் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஏ.எல். ஜலால்தீன் தெரிவித்தார்.

ஐந்து ஆண்டுகள் கொண்ட ஷரீஆ கற்கை நெறியைப் பயில்பவர்களுக்கு க.பொ.த (உ/த), அல்-ஆலிம், அஹதிய்யா, ஷரீஆ ஆகிய பரீட்சைகளுக்கு தோற்றுவதற்குத் தேவையான வழிகாட்டல்களும் கணனி, தையல் ஆகிய தொழில் பயிற்சிகளும் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில்; தேர்ச்சி வகுப்புக்களும் கற்கை நெறிக் காலத்துக்குள் வழங்கப்படும்.
விண்ணப்பதாரி அல்-குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்தவராகவும் 2014 க.பொ.த. (சா/த) பரீட்சையில் சித்தியடைந்தவராகவும் சிறந்த உடல் ஆரோக்கியம் நல்லொழுக்கம் உள்ளவராகவும் இருக்க வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.

தகைமையுடைய மாணவிகள் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 8மணி தொடக்கம் 12மணி வரை கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறும் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X