2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பிரதேச சபை உறுப்பினர்கள் கௌரவிப்பு நிகழ்வு

Thipaan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பொத்துவில் பிரதேச சபையின் நான்காவது ஆண்டு நிறைவு விழாவும் பிரதேச சபை உறுப்பினர்கள் கௌரவிப்பு நிகழ்வும்  ஹிதாயபுரம் தவிசாளர் கடற்கரை சிறுவர் பூங்கா திடலில் வெள்ளிக்கிழமை(03) நடைபெற்றது.

பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸர்ரத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித், பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எம்.முபாறக், எம்.எஸ்.முபாறக், எம்.எச்.ஏ.றகீம், எம்.துரைரட்ணம் மற்றும் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸர்ரத் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், க.பொ.த. சாதாரணத் தர பரீட்சையில் பொத்துவில் பிரதேசத்தில் 9ஏ சித்திபெற்ற மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X