Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா,-ரீ.கே.றஹ்மத்துல்லா
எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்;சி நாட்டில் ஒரு பலம் பொருந்திய கட்;சியாக மிளிரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகவின் அழைப்பின் பெயரில் ஞாயிற்றுக்கிழமை (05) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அம்பாறைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, அரச வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை மேலோங்க செய்ய வேண்டும். அந்த வகையில் எதிர்வரும் பொது தேர்தலை முன்னிட்டு நாங்கள் எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதற்காக வேண்டி, ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனாவை, ஜனாதிபதியாக்கியதில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளின் படி 100 நாட்கள் வேலைதிட்டத்தின் கீழ் பொருட்கள், எரிபொருள் விலை குறைப்பு மற்றும் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு என்பவற்றையும் வழங்கியுள்ளோம்.
1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் திறந்த பொருளாதார முறையை நாட்டுக்கு கொண்டு வந்த நாம், ஆறு மாத காலத்துக்குள் நிறைவேற்று முறையையும் கொண்டு வந்தோம் என்று தெரிவித்தார்.
நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குமான சூழ்நிலையை எமது அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. இதற்காக முக்கியமான ஒவ்வொரு துறைக்குமான ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்று வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ், கல்முனை நகரம் அபிவிருத்தி செய்யப்படும். அது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் பேசியிருக்கிறேன்.
அரசாங்கத்திடம் பணம் போதுமானதாக இல்லை. அவைகள் உலக வங்கிகளிலும் இந்தியா மற்றும் கட்டார் போன்ற நாடுகளிலும் பதுக்கப்பட்டுள்ளன. இவற்றை நாட்டுக்கு திருப்புவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் மாதம் இறுதியில் ஜனாதிபதி முறைமை மற்றும் விருப்பு வாக்கு முறைகள், தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. இதன் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், சிலர் இதனை விரும்பவில்லை.
தேர்தலின் பின்னர் முழுப்பலமுடனான ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான சூழல் ஏற்படும். அதன் பின்னர் நாட்டின் முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், 10 இலட்சம் பேருக்கான தொழில் வாய்ப்புகள் மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
நாட்டில் ஊழல் பிரச்சினை தொடர்பான பாரிய ஆபத்து காணப்படுகின்றது, இதனை உடனடியாக தீர்த்து வைக்க முடியாது. சட்டப்படி அதற்கான ஆவணங்கள், முறையான வழிமுறைகளை திரட்ட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்டம், நீதி, ஒழுங்கு அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்' என்றார்.
4 hours ago
4 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
03 Oct 2025