Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார், ஏ.ஜே.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா
நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவுசெய்யப்பட வேண்டும். இதுவே நாடாளுமன்ற மரபாகும் என சம்மாந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.முகம்மட் முஸ்தபா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார்.
ஹிங்குரானை சீனிக் கம்பனி நிர்வாகத்தினால் பாதிக்கப்பட்டு நஷ்டமடைந்த மோறாவில் பிரிவு கரும்புச் செய்கையாளர் அமைப்பின் தலைவர் மஹதூன் மகாத்தயா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கலந்துரையாடல், சம்மாந்துறை அல்- மர்ஜான் மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு, சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்திருப்பதால், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியென இரண்டு தரப்புக்களும் ஒன்றாக இருக்க முடியாது.
நாடாளுமன்றதில், எதிர்க்கட்சியை நியமிக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் நாடாளுமன்ற விதிப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்
இரா. சம்பந்தனுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் அதுதான் நாடாளுமன்றத்தின் மரபாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதன் மூலம் சிறுபான்மை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றார்.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட விவசாயிகள், தங்கள் காணிகளில் தொடர்ந்தும் கரும்பு செய்கையை செய்வதன் மூலம் பாரிய நஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் மோறாவில் பிரிவிலுள்ள மூன்று சமூகங்களையும் சேர்ந்ந இருநூற்றுக்கு மேற்றபட்ட கரும்புச் செய்கை குடும்பங்களின் 750 ஏக்கர் காணிகளிலிருந்து கடந்த சில போகங்களாக ஹிங்குரானை சீனிக் கம்பனி நிர்வாகத்தினால் திட்டமிட்ட முறையில் நஷ்டப்படுத்தப்பட்டு வறுமையா நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தங்களின் காணிகளில் மீண்டும் நெற்செய்கையை மேற்கொள்ள வேண்டும் அல்லது வருமானத்துக்கான மாற்று வழிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்தனர்.
இது தொடர்பில், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரை எதிர்வரும் புதன்கிழமை சந்தித்து அதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாக சம்மாந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எம்.எம். முஸ்தபா தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
03 Oct 2025