2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தேசிய கிழங்கு பயிர் ஊக்குவிப்பு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

தேசிய கிழங்கு பயிர் ஊக்குவிப்பு தினத்தை முன்னிட்டு அம்பாறையில் கிழங்கு பயிர் கண்காட்சியும் விற்பனையும் பெண்கள் தொழில் முயற்சி மேம்பாட்டு நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.

அம்பாறை விவசாயத்திணைகளத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பிரதம ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கண்காட்சியை திறந்துவைத்தார்.

இதன்போது உணவில் கிழங்கின் பயன்பாடு, கிழங்கின் மூலம் உணவுகள் தயாரிக்கும் முறைகள், கிழங்குப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் முறைகள் மற்றும் அதற்காக விவசாய திணைக்களம் வழங்கி வரும் உதவிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுசிந்த பி வணிக சிங்க, அரச அதிகாரிகள், விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X