Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
அம்பாறை, பாலமுனையில் அமைந்துள்ள இலங்கை விவசாயக் கல்லூரிக்கு 2015/2016ஆம் கல்வி ஆண்டுக்காக மாணவர்களை பதிவு செய்து அனுமதிக்கும் நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (06) நடைபெற்றது.
ஒரு வருட தமிழ் மொழி மூல விவசாய உற்பத்தி தொழில்நுட்ப டிப்ளோமா பயிற்சி நெறி, தேசிய தொழில் முயற்சித் தகைமை (என்.வி.கியு 5) மட்டக் கற்கை நெறிக்கு 22 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இக்கற்கை நெறி, பாலமுனை மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக தமிழ் மொழி மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கல்லூரியின் மூலம் விவசாய துறை சார்ந்த கல்வி ரீதியினாலான அதிக வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு கிடைத்திருப்பதை எண்ணி சந்தோசமடைகின்றேன்.
இந்தக் கல்லூரியின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தில் கல்லூரியின் முன்னேற்றம் மாணவர்களாகிய உங்களது கைகளிலேயே தங்கியுள்ளது.
எனவே, நீங்கள் காட்டும் ஒத்துழைப்பிலும் கூட்டுப்பொறுப்பிலும் இந்தக் கல்லூரி எதிர்காலத்தில் ஏனைய விவசாயக் கல்லூரிகளை விட சிறந்து விளங்குவதுடன் இந்த நாட்டில் உயர்ந்து விளங்கும் ஒரு விவசாயக் கல்லூரியாக திகழ வேண்டும்.
இன ஒற்றுமையினூடாக இந்த கல்லூரியின் கல்வி ரீதியான வளர்ச்சி கட்டியெழுப்பப்பட வேண்டும்.
கல்வி கற்கின்ற ஒவ்வொரு மாணவனது உள்ளத்திலும் ஒரு இலட்சியம் இருக்க வேண்டும் நாம் கற்கும் கல்வியின் மூலம் எதிர்காலத்தில் சிறந்த கலவியலாளராக வரவேண்டும்.
நாம் கற்கின்ற கல்வியின் மூலம் தான் பிறந்து வளர்ந்த ஊர், பிரதேசம் இந்த நாடு பயன்பெற வேண்டும். இவ்வாறான இலட்சியத்துடன் ஒரு மாணவன் தனது கல்வியினை தொடருவானாயின் அவன் ஒரு போதும் பின்னடைவை நோக்கிய பயணத்தில் இருந்தும் முன்னேற்றமடையக் கூடிய பயணத்தையே நோக்கி அவனது பயனம் தொடர்வதுடன் அவனது எதிர்காலம் சிறந்து விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
மேலும் இவ்விவசாயக் கல்லூரி கிழக்கு மாகாணத்திலேயே முதலாவது விவசாயக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு, திருக்கோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மொழி பேசும் இளைஞர், யுவதிகள் எதிர்காலத்தில் அதிக நன்மை பெறக்கூடியதாக இருக்கும் என்றார்.
இந் நிகழ்வில், பாலமுனை விவசாயக் கல்லூரி அதிபர் எம்.எப்.அஹமட் சனீர், குண்டசாலை விவசாய கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும் விவசாய பணிப்பாளருமான ஆர்.சிவனேசன், கல்லூரி விரிவுரையாளர்களான எஸ்.எல்.இக்பால், ஏ.பேரின்பராசா, எம்.எஸ்.எம்.இம்தியாஸ் உட்பட மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
4 hours ago
4 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
03 Oct 2025