2025 ஜூலை 19, சனிக்கிழமை

தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

இலங்கை தாதியர் சேவை தரம் - III க்கு  நியமிக்கப்பட்ட தாதியர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் அலுவலகத்தில் திங்கட்கிழமை (06) நடைபெற்றது.

அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை, கிராமிய மின்சாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தாதியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாணப் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன், உதவிச் செயலாளர் ஜே.ஹுசைன்தீன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எம்.சஹுபீர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X