2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விவசாயக்கடன் வழங்கும் திட்டம்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அக்கரைப்பற்று மகாசக்தி சிக்கன கூட்டுறவுச் சங்கத்தின் 40ஆவது விவசாயக் கடன் வழங்கும் நிகழ்வு, இன்று செவ்வாய்க்கிழமை (07) மகா சக்தி நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரம் நீர்ப்பாசனம் மீன்பிடி விவசாய கூட்டுறவு அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கலந்துகொண்டு விவசாயம் மற்றும்  பயிர்ச்செய்கையாளர்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம், அளிக்கம்பை, பனங்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 200 விவசாயிகளுக்கு கடன் தொகைக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X