Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஏப்ரல் 07 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க வந்தபொழுது, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு சாரார் சாட்சியமளிக்கச் செல்லவிடாது தங்களது எதிர்ப்பு அணியில் சேர்ந்து கொள்ளுமாறு கூறி இடையூறு விளைவித்ததாக தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு குறித்து தாங்கள் விசாரித்து வருவதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்துக்கான முதலாவது அமர்வு திங்கட்கிழமை (06) ஆரம்பமானது.
கல்முனைப் பிரதேச செயலக மண்டபத்தில் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை திங்கட்கிழமை (06) இந்த அமர்வை புறக்கணித்த ஒரு சாரார் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை திஙகட்கிழமை சாட்சியமளிக்க வந்த தங்களை எதிர்ப்பாளர்களின் அணியில் சேர்ந்து கொள்ளுமாறும் சாட்சியமளிக்கத் தேவையில்லை என்று கூறி இடையூறு விளைவித்ததாக இடையூறு விளைவிக்கப்பட்ட மூவர் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளனர்.
எவ்வாறாயினும் தாங்கள் எதிர்ப்பாளர்களின் இடையூறுகளையும் மீறி வந்து ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்ததாக நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ஏ. புனிதவதி (வயது 55), வி. வரதலோஜினி (வயது 49) ஏ. கோகிலா (வயது 51) தெரிவித்தார்.
இதுபோன்று மேலும் சிலர் எதிர்ப்பாளர்களின் இடையூறுகளைப் பொருட்படுத்தாது ஆணைக்குழு முன்பாக தமது உறவுகள் கொல்லப்பட்டமை பற்றி சாட்சியமளித்தாகத் தெரிவித்தனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி மக்ஸ்வல் பராக்கிரம பரணகம மற்றும் ஆணையாளர் மனோகரி ராமநாதன் தலைமையிலான
ஆணைக்குழுவினர் செவ்வாய்க்கிழமையும் விசாரணையில் ஈடுபட்டனர்.
செவ்வாய்க்கிழமை 112 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago