Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஏப்ரல் 07 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அக்கரைப்பற்று நீதிமன்ற நியாய ஆதிக்கத்துக்குட்ட பிரதேசங்களில் சிறுவர் துஷ்பிரயோம் மற்றும் கஞ்சா போதைப்பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாகவும் குறுகியதெரு காலப்பகுதியினுள் 50க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய எச்.எம்.முகம்மது பஸீல், செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார்.
அக்கரைப்பற்று அஸ்- ஸறாஜ் ஜூனியர் கல்லூரி மாணவர்களுக்கான குறுளை சின்னம் சூட்டும் விழா, பாடசாலையில் இன்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நீதிபதி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று சிறுவர்கள் துஷ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாக மாறியுள்ளது. அண்மைக்காலமாக இப்பிராந்தியத்தில் தொடரப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் அதிகமான துஷ்பிரயோகங்கள் உறவினர்களினால் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் இச்சிறுவர்கள், பெற்றோர்களினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மிகக் கேவலமான சமூக சீர்கேடாக காணப்படுகின்றது.
எனவே, சிறுவர்கள் விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். வீட்டு வன்முறைகள், பெண்கள், சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் நிதிமன்றம் ஊடாக பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
சிறுவர்களுக்கு நாம் வழங்கக் கூடிய மிக உயர்ந்த செல்வம் கல்விச் செல்வமே ஆகும். கல்வியோடு இணைந்த இடைப்பாடவிதான செயற்பாடுகளும் மாணவர்களினது ஆளுமைவிருத்திக்கு கூடிய பங்களிப்பை வழங்குகிறது.
இணைப்பாடவிதான செயற்பாடுகளுடன் இணைந்த சாரணர் அமைப்பு சிறந்த தலைமைத்துவப் பயிற்சிகளையும் நல்லொழுக்கமுள்ள பிரஜைகளையும் சமூகத்தில் உருவாக்குவதற்கு அளப்பரிய பங்களிப்பை செய்து வருகின்றது என்றார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago