2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குழு விஜயம்

Gavitha   / 2015 ஏப்ரல் 07 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை மாவட்ட மாவடிப்பள்ளியில் திவிநெகும திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் நேற்றிரவு திங்கட்கிழமை (06) விஜயத்தை மேற்கொண்டனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.ஆரிப் சம்சுதீனின் அழைப்பின் பேரில் நேற்றிரவு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எ.எல்.எம்.நஸீர், அலிசாஹிர் மௌலான உள்ளிட்ட பலர் இந்த விஜயத்தின்போது கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் தலைவர் என்.மஹ்ருப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டிடம் நம்பிக்கையாளர் சபையின் சார்பில் அதன் தலைவரினால் மகஜர் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

மாவடிப்பள்ளி பொதுநூலகத்துக்கு சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் இல்லாத குறையினால், இந்த நூலகம் திறந்து வைப்பதற்கு காலதாமதமாக செல்கின்றது. இதனை செய்து தறுமாறு வேண்டப்பட்டதையடுத்து முதலமைச்சர் குறித்த தொகையினை வழங்கி பொதுநூலகத்தையும் திறக்க என்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் உறுதியளித்தார்.

இந்த பொதுநூலகம் திவிநெகும திட்டத்தின் மூலம் சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X