2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வைத்தியருக்கு சரீரப்பிணை

Gavitha   / 2015 ஏப்ரல் 07 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸை, கடமையில் ஈடுபடவிடாது, அவரது கடமைக்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்தியரை ரூபாய் ஒரு   லட்சம் சரீரப் பிணையில் செல்லுமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல் இன்று (07) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை குற்ற பலாத்காரம் புரிந்து அரச கடமைக்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த வைத்தியரை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த போதே அவர் மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X