2025 ஜூலை 17, வியாழக்கிழமை

போஷாக்கு உணவுப்பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு

Gavitha   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ் 

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போசனை உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (08) ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட ஓலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என சுமார் 252 பேருக்கு இந்த போசனை உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் பருப்பு, கௌபி, நிலக்கடலை, சோயா, டின்மீன், சிவப்பு அரிசி, நெத்தலிக்கருவாடு என்பன பொதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இப்போசனைப் பொதிகள் வழங்கும் நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், பாடசாலை அதிபர் எம்.சரிப்தீன், கிராம சேவை உத்தியோகஸ்தர்களான எஸ்.எச்.எம்.முஜீப், ஏ.எல்.அஷ்ரப், எம்.எப்.எம்.நதீர், யு.எல்.எம்.ஜெஸீர், ஐ.எல்.சித்தீக், ஏ.எல்.டில்சாத், எம்.எஸ்.ஏ.நியாஸ் உட்பட குடும்ப நல சுகாதார உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X