2025 ஜூலை 17, வியாழக்கிழமை

40ஆவது விவசாயக் கடனுதவி வழங்கும் நிகழ்வு

Gavitha   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

அம்பாறை மாவட்டத்தின் அக்கறைப்பற்று ஆலயடிவேம்பு மகாசக்தி சிக்கன கூட்டுறவு அமைப்பின் 40ஆவது விவசாயக் கடனுதவி வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (07) ஆலயடிவேம்பு மகாசக்தி அமைப்பின் ஒன்றுகூடல் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் சோசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டதுடன்,  சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் மற்றும் கடனுதவி பெறுவோர் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சங்கத்தின் 25 உபபிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 156 உறுப்பினர்களுக்கு விவசாயத்துக்கான கடனுதவிக்கு  காசோலை வழங்கி வைக்கப்பட்டன.

1992ஆம் ஆண்டு 172 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பானது, தற்போது 25 உபபிரிவுகளுடன் 2,500 பெண் அங்கத்தவர்களைக் கொண்டு மிகவும் விசாலமான வளர்ச்சி நிலையைக் கொண்டுள்ளதுடன் இருக்கின்ற அங்கத்தவர்களின் நிர்வாகத்தின் அயராத உழைப்பின் காரணமாக இத்தகையதொரு நிலையை எய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமொன்றாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X