Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை விசாரணை செய்ய வேண்டும் என காணாமல் போன அல்லது படுகொலை செய்யப்பட்டவர்களின் முறைப்பாடுகளை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இலங்கை உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்முனையில் நடைபெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத், திங்கட்கிழமை (06)
சாட்சியமளித்தபோதே மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1990ம் ஆண்டு புலிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் போன தனது சகோதரர் அக்ரம் மற்றும் தனது தந்தை தொடர்பில், முன்னாள் பிரதியமைச்சர் அமைச்சர் முரளிதரனிடம் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றார்.
அத்துடன், அவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடமான குருக்கள் மடம் பகுதியிலுள்ள புதை குழி தொடர்பான விசாரணைக்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்துக்;கான விசாரணைகள் கடந்த இரு நாட்களாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
50 minute ago
2 hours ago