2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ரூ.12 இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களுக்கு தீ வைப்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட கோமாரி கடற்கரைப் பிரதேசத்தில் 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆழ்கடல் மீன்பிடி உபகரணங்கள், இனந்தெரியாதவர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை (07) நள்ளிரவு எரிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோமாரி -02ஆம் பிரிவைச்சேர்ந்த சிங்கநாயகம் ராஜ்குமார் என்பவரின் மீன்பிடிப்படகுக்கான இயந்திரம்-01 (மோட்டார்),  800 லீற்றர் மண்ணெண்ணெய் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி வலைகள் 02 என்பன கோமாரி கடற்கரைப் பிரதேசத்திலுள்ள மீன்பிடி வாடியில் வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

இதனால் உபகரணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவித்த பொத்துவில் பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X