Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
அம்பாறை, கல்முனை தமிழ் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாண்டிருப்பு விஸ்வப்பிரம்மகுல இந்து இளைஞர் மன்றத்தினரால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) டெங்கு ஒழிப்பு மற்றும் இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலமானது, ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ அரசடி அம்மன் ஆலய முன்றலில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் சனிக்கிழமை (11) அன்று இரத்ததான முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விஸ்வப்பிரம்மகுல இந்து இளைஞர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
2 hours ago