2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'ஆராயக்கியமான சிறுவர் சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கமாகும்'

Gavitha   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

ஆரோக்கியமான சிறுவர் சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்குத் திட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 300 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான  போசாக்குப் பொதிகளை இன்று (08) வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். இவர்களை ஆரோக்கியமான ஒரு சமுகமாக கொண்டுவருவதன் மூலமே அவர்களை நாட்டுக்கான  நிலையான வளமாக மாற்றிக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

புதிய அரசாங்கம் அதிகளவான நிதயொதுக்கீட்டை மேற்கொண்டு கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை கொண்டுவரும் வகையில், முட்டை, பருப்பு, நிலக்கடலை, பாசிப்பயறு, நெத்தலிக்கருவாடு, டின்மீன், சிவப்பு அரிசி, கடலை, சோயா, உள்ளிட்ட பத்துவகையான உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் வருமான மட்டம், அரசாங்க தொழில் போன்ற எந்தவிதமான பாகுபாடுமில்லாமல் அனைத்து கர்ப்பிணித்தாய்மாருக்கும்  மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் இப்போசாக்கு பொதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X