2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

முஸ்லிம் விவாகப் பதிவாளரை நியமிக்குமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 08 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
 
அக்கரைப்பற்று பிரதேசத்துக்கான முஸ்லிம் விவாகப் பதிவாளரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2014ஆம் ஆண்டு அக்கரைப்பற்று பிரதேசத்துக்கான முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திலும் அம்பாறை மாவட்ட செயலகத்திலும் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு ஒரு வருடமாகியும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியோர் தெரிவிக்கின்றனர்.
 
எனினும், நேர்முப் பரீட்சையில் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியோர் தெரிவிக்கின்றனர்.
 
அரசாங்கத்தின் 100 நாட்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேசத்துக்கான முஸ்லிம் விவாகப் பதிவாளரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தபால் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீமிடம் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X