2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இளைஞர் கழக உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு

Gavitha   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

புதிய அரசாங்கத்தின் கோப் வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலக மட்டத்திலுள்ள இளைஞர் கழக வீரர்களை ஊக்குவிப்பதும் அவர்களுக்கிடையில் புதிய நிருவாகத்தினரை தெரிவு செய்யும் நிகழ்வுகளும் அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைவாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட 32 கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள இளைஞர் கழக உறுப்பினர்களுக்கான புதிய நிருவாகத் தெரிவு, அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் விளையாட்டுக்கழக சம்மேளன தலைவர் யூ.எல்.முஹம்மட் சபீர் தலைமையில் புதன்கிழமை (08) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு, அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிச் செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி யூ.எல்.மஜீட், அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகஸ்தர் ஏ.எம்.எம்.றசீன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான எம்.எம்.நாஸீர் அலி, எம்.எம்.சித்தி நாழிறா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிருவாகத்தினரில் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரும் சபை முதல்வருமாகிய யூ.எல்.முஹம்மட் சபீர் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் ஏ.எல்.ஹனான் அஹமட் உப தலைவராகவும் எம்.சாஜீத் உப செயலாளராகவும் எம்.எஸ்.ஜெனீஸ் பொருளாளராகவும் ஜே.பஸ்மிர் அமைப்பாளராகவும் எம்.ஏ.எல்.எம்.றிப்கான் உப அமைப்பாளராகவும் ஆர்.எம்.முபாரீஸ் கணக்குப் பரிசோதகராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X