Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஏப்ரல் 09 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
சிறிது காலம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து உள்ளூர் அரசியல் வாதிகள் ஒரு சிலரின் நடவடிக்கைகள் காரணமாக ஒதுங்கியிருந்த அக்கட்சியின் பாலமுனை ஸ்தாபக அமைப்பாளர் எஸ்.எம்.எம்.ஹனிபா, மீண்டும் பாலமுனைப் பிரதேசத்தில் கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபடப் போவதாக வியாழக்கிழமை (09) தெரிவித்தார்.
தற்போது கட்சியின் புனரமைப்பு வேலைகளிலிலும் கட்சியிலிருந்து ஒதங்கியிருக்கும் ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் இணைக்கும் நடவடிக்கைகளிலும் கட்சியின் வளர்ச்சி மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் சம்மந்தமாக பல்வேறு தரப்பினருடன் பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
கட்சியின் எதிர்கால நடவடிக்கை மற்றும் பாலமுனை பிரதேச அபிவிருத்தி சம்மந்தமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீரை அண்மையில் அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்புக்கான ஏற்பாட்டினை பாலமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் முன்னாள் செயலாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை ஸீறா சபை இணைப்பாளருமான எம்.ஏ.சதாத் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
03 Oct 2025