Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 09 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாக சாய்ந்தமருது பிரதேசத்துக்கான தனியான உள்ளூராட்சி சபையை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அப்பிரதேசத்திலுள்ள அனைத்துப் பொது அமைப்புகளும் ஒன்றுகூடி தீர்மானம் எடுத்துள்ளது.
இது தொடர்பான பிரகடனக் கூட்டம் புதன்கிழமை (08) சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் ஆலோசனை பேரவைத் தலைவரும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான எம்.ஐ. ஜப்பார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உலமாசபை, பல்கலைகழக மாணவர் ஒன்றியம், வர்த்தக சங்கம், மீன்பிடி, விவசாய சங்கங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருதுக்கான தனி உள்ளூராட்சி சபையை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிணைந்து முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு பின்வரும் தீர்மானங்களும் இங்கு நிறைவேற்றபட்டுள்ளன.
சய்ந்தமருது மக்களின் நீண்டகால அபிலாஷையாகவும் தேவையாகவும் இருந்து வருகின்ற தனியான உள்ளூராட்சி சபையை எதிர்வரும் நாடாளுமன்றத்துக்கு முன்னர் பெற்றுக் கொள்ளும் வகையில் அதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தல்
இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு மகஜர்களை அனுப்புதல்.
சாய்ந்தமருக்கான தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்தித் தருமாறு கோரி அரசாங்கம் மற்றும் அரசியல் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்களை ஒன்று திரட்டி கடையடைப்பு, ஹர்த்தால், வீதிமறியல், உண்ணாவிரதம் போன்ற வடிவங்களில் அமைதிப் போராட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபையை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஏற்படுத்தி தாராவிட்டால் அத் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு மக்களை கோருவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் ஆலோசணை பேரவைத் தலைவரும ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான எம்.ஐ. ஜப்பார் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
42 minute ago
43 minute ago