2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

முள்ளிப்பொத்தான கந்தளாவ மத்திய மருந்தகத்துக்கு அமைச்சர்கள் விஜயம்

Gavitha   / 2015 ஏப்ரல் 09 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்,ஏ.எம்.ஏ.பரீத்

முள்ளிப்பொத்தான கந்தளாவ மத்திய மருந்தகத்தை, போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் நேற்று புதன்கிழமை (08)சென்று பார்வையிட்டனர்.

பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக்கின் தம்பலகாமம் பிரதேச இணைப்பாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ். அய்யுப்கானின் வேண்டுகோளை ஏற்று வருகை தந்த பிரதி அமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள், வைத்தியசாலையின் குறைபாடுகளையும் அப்பிரதேச சுகாதார பிரச்சினைகளையும் நேரடியாக பார்வையிட்டனர்.

அதேவேளை பொதுமக்கள் பிரதான தேவையாக உள்ள சுகாதார பிரச்சினைகளை அமைச்சர்களிடம் முன்வைத்தனர். அத்தோடு மத்திய மருந்தகத்தினை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தித் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் மன்சூர், மக்களின் நலனில் அக்கறை கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபை உதவி தவிசாளர் கே.எம்.நிஹார் மற்றும்  ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X