Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
கல்முனை அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் வியாழக்கிழமை(9) கல்முனை மாநகர சபையில் மாநகர முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.
நகர அபிவிருத்தி சபையின் பொறியியலாளர் குழு, இலங்கை காணி அபிவிருத்தி மற்றும் மீட்பு கூட்டுத்தாபன பணிப்பாளர் நாயகம் மற்றும் நீர்பாசன திணைக்காள அதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
கல்முனை தொகுதி மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் வயல் காணிகளை குடியிருப்புக்காக நிரப்புதல், சாய்ந்தமருது தோனா அபிவிருத்தி, கிட்டங்கி வாவி மற்றும் அதனோடிணைந்த நீர்பாசனத் திட்டம் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பிலான நகல் திட்டங்கள் மற்றும் வரைபடங்கள் அதிகாரிகளால் சமர்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டது.
இத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு முன்னதாக அவற்றில் காணப்படும் தொழில்நுட்ப பிரச்சினைகள் யாவும் செயல்முறையாக பரீட்சிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென முதல்வர் நிஸாம் காரியப்பர் குழுவினரை வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை இத்திட்டங்களை அரசியல் ரீதியாக நடைமுறைப்படுத்தும்போது பிரதேச அரசியல்வாதிகளிடமும் கலந்தாலோசிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று அறிக்கையை தயாரிக்குமாறு முதல்வர் நிஸாம் காரியப்பர் சம்மந்தப்பட்ட குழுவினரைக் கேட்டுள்ளார்.
இக்கலவந்துரையாடலில் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.முபீன், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சிரேஷ்ட வேலை அத்தியாட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத், முதல்வரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago