2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

திண்மக் கழிவகற்றல் திட்டத்துக்கு வாகனம் வழங்கி வைப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை கிரீன்பீல்ட வீட்டுத்திட்ட பகுதியின் திண்மக் கழிவகற்றல் திட்டத்துக்காக கல்முனை மாநகர சபையினால் குபோட்டா இயந்திர வாகனம் வெள்ளிக்கிழமை (10) வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் கிரீன்பீல்ட வீட்டுத்திட்ட ஆதன முகாமைத்துவ சபை நிர்வாகத்தினரிடம் மாநகரசபை வளாகத்தில் வைத்து இந்த வாகனத்தை கையளித்தார்.

இந்நிகழ்வில் மாநகரசபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பதில் சட்ட அதிகாரி எம்.பீ.எம். பௌசான், முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம். பாறூக், விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த சுமார் 450 குடும்பத்தினர் இவ்வீட்டுத் திட்டத்தில் வசித்து வருகின்றனர். அங்கு நாளாந்தம் சேர்கின்ற திண்மக்கழிவுகள் மற்றும் குப்பைகளை அதன் முகாமைத்துவ சபையே அகற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பணியை மேலும் சிறப்பாக முன்னெடுப்பதற்கு இயந்திர வாகனமொன்றை வழங்குமாறு அம் முகாமைத்துவ சபை, கல்முனை மாநகர முதல்வரிடம் விடுத்த வேண்டுகோளையேற்றே முதல்வர் நிஸாம் காரியப்பர் இதனை வழங்கியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X