2025 ஜூலை 16, புதன்கிழமை

நிந்தவூர் பிரதேசத்தில் உணவகங்கள் திடீர் சுற்றிவளைப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள நிந்தவூர் பிரதேசத்திலுள்ள உணவகங்கள் வெள்ளிக்கிழமை (10) திடீர் சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த சுற்றிவளைப்பு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.அலாவுதீனின் கவனத்துக்கு அமைய,  மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பி.பேரம்பலம் தலைமையில், நிந்தவூர் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

13 உணவகங்கள் 2 பாடசாலை சிற்றுண்டிசாலைகள் மற்றும் ஒரு மதுபானசாலையும் சுற்றிவளைக்கப்பட்டு, உணவுப்பண்டங்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டது.

இதன்போது, காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்கு பொறுத்தமற்ற பெருமளவான உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், அவை அழிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பி.பேரம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றிவளைப்பின் போது, சுகாதாரமற்ற முறையில் நடத்தப்பட்டு வந்த ஜந்து உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 20ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பி.பேரம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X