2025 ஜூலை 16, புதன்கிழமை

உதைப்பந்தாட்ட காலணிகள் வழங்கிவைப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீரின் தனிப்பட்ட நிதியிலிருந்து, அட்டாளைச்சேனை அஷ்ரப் விளையாட்டுக் கழக வீரர்களுக்கு ஒரு தொகுதி உதைப்பந்தாட்ட காலணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு  சனிக்கிழமை (11) இடம்பெற்றது.

அஷ்ரப் விளையாட்டுக் கழக உதைப்பந்து குழுவின் தலைவர் என்.றஸா அஹமட் தலைமையில் அட்டாளைச்சேனை கபானா ஹோட்டல் பூங்காவில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அஷ்ரப் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எ.றிபாஸ், அமைப்பாளர் ஏ.பௌசுல் அமீர் மற்றும் கழகத்தின் வீரர்களும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X