Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.ஏ தாஜகான்
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் நிர்வாகம் சீர் குழைந்து காணப்படுகின்றதன் காரணமாக பொதுமக்களுக்கு சரியான வைத்திய சேவையினை வழங்க முடியாதுள்ளது. வைத்தியசாலையின் நிர்வாக கட்டமைப்பை உடன் நிவர்த்தி செய்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்று பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுத் தலைவர் ஏ.றபிக் தெரிவித்தார்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினரின் ஒன்றுகூடல், பொத்துவில் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் அபிவிருத்தி குழுத்தலைவர் ஏ. றபீக் தலைமையில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்னர் 03 நபர்கள் விபத்துக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலைக்கு வருகை தந்ந பொழுது, அங்கு அவர்களுக்கான சிகிச்சையினை வழங்குவதற்குரிய வைத்தியர்கள், சிற்றூழியர்கள் யாரும் இல்லை.
ஒரு மணி நேரம் தாமதமாக ஒரு வைத்தியர் வருகை தந்தார். அது மாத்திரமன்றி சிற்றூழியர்கள் இல்லை. இந்த நிலைமையினை வைத்திய அத்தியட்சகரிடம் எடுத்துக்கூறினால், எங்களை வைத்தியசாலையின் பக்கம் வர வேண்டாம் என்று கூறுகின்றார். இது நியாயமா? இதனால்தான் உடனடியாக தகுதியான வைத்திய அத்தியட்சகரை நியமிக்குமாறு அதிகாரிகளிடம் நாம் கேட்கின்றோம்.
வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு வைத்திய அத்தியட்சகர் தடையாக இருக்கின்றார். இதனால் பொதுமக்கள் வைத்தியசாலை அபிவிருத்தி குழவினரை சந்தித்து முறையிடுகின்றனர். நோயாளிகளை பராமரிப்பதில் வைத்தியசாலை முறை தவறி நடக்கின்றது. ஊரிய நபர்களை சந்தித்து வைத்தியசாலையின் பிரச்சினைகளை அபிவிருத்தி குழுவினர் முன்வைக்கின்ற பொழுது, அங்கு பிரச்சினை இல்லை என்று குறிப்பிடுகின்றார். அப்படியென்றால் மக்கள் ஏன் முறையிட வேண்டும். அரசின் 100 நாட்கள் அபிவிருத்தி திட்டத்தில் பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த அபிவிருத்தி குழவினரின் ஒன்றுகூடலில், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.எம். வாஸித்தும் கலந்து கொண்டார்.
3 hours ago
3 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
03 Oct 2025