2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தடைசெய்யப்பட்ட சிகரெட்டை விற்பனைக்காக வைத்திருந்தவர்களுக்கு சரீரபிணை

Kogilavani   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா  

கல்முனை பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட சிகரெட்டை, விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான ஐவரையும் 10 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து, கடந்த 2 ஆம் திகதி கல்முனை மாதவன் வீதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து சுமார் 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்ட விரோத சிகரெட்கள் கைப்பற்றப்பட்டன.

கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.கப்பார் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவற்றை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஐவரை கைதுசெய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், கல்முனை நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவ் வழக்கு நேற்று வியாழக்கிழமை (16) கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கே.பேரின்பராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்படி ஐவரையும் 10 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்ததுடன் வழக்கு விசாரணையை எதிர்வரம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .