2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

45 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் தையல் போதனாசிரியர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் காவலாளிகள் பதவிகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட 45 பேருக்கான நியமனக் கடிதங்கள்; நேற்று வியாழக்கிழமை (16) சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள தையல் பயிற்சி நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டன.

இளைஞர், யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்பை உருவாக்கும் நோக்கில்  தையல் பயிற்சியை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக  கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவருமான  றிஷாட் பதியுதீனின்; சிந்தனையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

ஆடைகள் மற்றும் குடிசைக் கைத்தொழில் நிறுவகத்தின் ஊடாக செயற்படுத்த வேண்டுமென்பதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீடின் அயராத முயற்சியினால் அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் ஏற்பாட்டில் இலங்கை கைத்தொழில் மற்றும் வணிகதுறை அமைச்சின்; புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் ஸ்ரீலங்கா சதேச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான சீ.எம்.முபீத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .