2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விபத்தில் ஆட்டோ சாரதி காயம்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை,  திருக்கோவில் -பொத்துவில் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ள விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான  பஸ் வண்டியும் முச்சக்கரவண்டியும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பொத்துவிலிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பொத்துவில் டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து பஸ் வண்டி பிரயாணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தியபோது, அப்பக்கத்திலிருந்து வந்துகொண்டிருந்த   முச்சக்கரவண்டி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பஸ்ஸின் பின்புறம் மோதியது. இதன்போது  படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியான  திருக்கோவில் 2ஆம் பிரிவைச்  சேர்ந்த (வயது 21)  யோ.புவிதரன் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X