2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம்

Sudharshini   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரோக்கியமான தாய்மை மற்றும் வளமான எதிர்கால சமுதாயம் எனும் தொனிப்பொருளுக்கமைவாக சிறுவர்கள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில், இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான சத்துணவு பொதிகள் 246 கர்பிணிகளுக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.முனவ்பர் தலைமையில் பிரதேச சுகாதார வைத்திய பணிமனையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல். அலாவுதீன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், பொதுச்சுகதார பரிசோதகர் ப.கேதீஸ்வரன், எம்.மனோரஞ்சிதம் உட்பட பலர் கலந்துகொண்டு சத்துணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .