Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் பிரதேசத்தின் 22 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள உணவு கையாளும் உணவக நடத்துனர்களுக்கான உணவுப் பாதுகாப்பு தொடர்பாக விழிப்பூட்டும் செயலமர்வு நேற்று வெள்ளிக்கிழமை(17) இடம்பெற்றது.
திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி ஏ. உதயசூரியா தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இச்செயலமர்வு, திருக்கோவில் பிரதேச சபையின் அனுசரனையில் இடம்பெற்றது.
உலக சுகாதார தினத்தினை முன்னிட்டு பாடசாலை சிற்றுண்டிசாலை நடத்துனர்கள் மற்றும் பிரதேசத்தில் இயங்கும் பொது உணவக நடத்துனர்கள் ஆகியோரை விழிப்பூட்டும் வகையில் இச் செயலமர்வு நடத்தப்பட்டது.
இதன் போது பாதுகாப்பான மற்றும் சுகாதார முறையிலான உணவுகளை பொது மக்களுக்கு வழங்குவது சம்மந்தமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இச்செயலமர்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசேதகர் பி.பேரம்பலம் கலந்து கொண்ட விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், திருக்கோவில் பிரதேசசபை செயலாளர் கே.சில்வெஸ்டர், பிரதேச மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.லோகிதகுமார், பொது சுகாதார பரிசோதகர் கே.சசிதரன் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கியதுடன் நூற்றுக்கு மேற்பட்ட உணவக உரிமையாளர்களும் பங்கு பற்றியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
32 minute ago
36 minute ago