2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

நீடித்து நிலைதிருக்கக் கூடிய புரிந்துணர்வு செயலமர்வு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான 'சமாதானம் மற்றும் முறன்பாடு' என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் ஒரு நாள் செயலமர்வு, பல்கலைக்கழக மென் திறன் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது.

உரிமை மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச இளைஞர் வலையமைப்பு (Youth Group Of Global Network For Rights And Development) நிறுவனத்தினால் இளைஞர்களுக்கு மத்தியில் நீடித்து நிலைதிருக்கக் கூடிய புரிந்துணர்வினை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
 
பயிற்சி பெற்ற பல வளவாளர்களின் அனுபவப் பகிர்வுடன் மாணவர்களின் அனுவம் மற்றும் கருத்துப்பரிமாறல்களுடன் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால சம்பவங்கள் பரிமாறப்பட்டதுடன் சமாதானம் மற்றும் முறன்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X