Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,ஐ.ஏ.ஸிறாஜ்
கிழக்கு மாகாண கல்வியமைச்சின் இந்த வருடத்துக்கான முதலாவது சுற்றறிக்கை, தனிச்சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ளமை குறித்து, 'கிழக்கு மாகாண இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகஸ்தர்கள் சங்கம்' திங்கட்கிழமை (20) கண்டனம் தெரிவித்துள்ளது.
'பொது நிருவாகமும் அது தொடர்பான அறிவுறுத்தல்களும் - உத்தரவுகளும்' என சிங்கள மொழியில் தலைப்பிடப்பட்ட சுற்றறிக்கை கிழக்கு மாகாண கல்வியமைச்சின் இந்த வருடத்துக்கான முதலாவது சுற்றறிக்கையாகும். இது கடந்த 10ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிழக்கு மாகாண இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம். முக்தார் தெரிவிக்கையில்,
கடந்த மாகாணசபை ஆட்சியில் கிழக்கு மாகாண கல்வியமைச்சராக சிங்களவர் ஒருவர் பதவி வகித்தபோது, கிழக்கு மாகாணக் கல்வியமைச்சு, தமிழ் மொழி மூலப் பிரதேசங்களுக்கு தமிழ் மொழியிலும் சிங்கள மொழிப் பிரதேசங்களுக்கு சிங்கள மொழியிலும் சுற்றறிக்கைகளை அனுப்பி வைத்தது.
ஆனால், கிழக்கு மாகாண சபையின் புதிய ஆட்சியில், தமிழர் ஒருவர் கல்வியமைச்சராக பதவி வகிக்கின்ற நிலையில், தமிழ் பேசுவோரின் மொழியுரிமை மீறப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண கல்வியமைச்சராக தமிழர் ஒருவர் பதவியேற்ற பின்னர் வெளியிடப்படுகின்ற முதலாவது சுற்றறிக்கை, சிங்கள மொழியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையானது கவலைக்குரிய விடயமாகும்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் 12 வலயங்கள் தமிழ் மொழி மூலமானவை. 5 வலயங்கள் சிங்கள மொழி மூலமானவை.
இந்த வகையில், தமிழ் பேசுவோரைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணத்துக்குரிய கல்வியமைச்சின் செயலாளரொருவர் சிங்களத்தை மட்டும் பேசத் தெரிந்த, தமிழ் மொழியை அறவே அறிந்திராத ஒருவராக உள்ளமையானது துர்ப்பாக்கியமானது.
அத்துடன், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக தமிழ் பேசும் ஒருவர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டுமெனவும் சங்கம் வலியுறுத்துகிறது என கிழக்கு மாகாண இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம். முக்தார் தெரித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
43 minute ago
45 minute ago
2 hours ago