2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நீர்ப்பாசன அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

Thipaan   / 2015 ஏப்ரல் 20 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பிரதேச நீர்ப்பாசன அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அக்கரைப்பற்றில் ஞாயிற்றுக்கிழமை (19)  நடைபெற்றது.

இக்  கூட்டம், அக்கரைப்பற்று வலது கரை திட்ட முகாமையாளர் அலுவலகத்தில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். ஜ}னைதீன் தலமையில் நடைபெற்றது.

இலங்கை காணி மீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபன செயற்பாட்டு பணிப்பாளர் எஸ்.எல்.எம். ஹனீபா (மதனி) கலந்து கொண்டு விவசாயிகளிடம் அபிவிருத்தி செய்யப்படவுள்ள நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் விவசாயப் பாதைகள் என்பவற்றை கேட்டறிந்து கொண்டார்.

சம்பக்களப்பு, மேட்டுவெளி, பள்ளவெளி, பொரன்வெளி ஆகிய பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மிகவிரைவில் தீர்வு காணப்படுமென செயற்பாட்டு பணிப்பாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .