Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஏப்ரல் 20 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
சிம்ஸ் கெம்பஸ் நிறுவத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் கணினி மற்றும் ஆங்கில மொழிப் பயிற்சிக்கான புலமைப்பரிசிலின் முதற்கட்டமாக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(19) நடைபெற்றது.
சிம்ஸ் கெம்பஸின் சந்தைப்படுத்தல் பிரிவினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிம்ஸ் கெம்பஸ் பணிப்பாளர் நாயமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளரும் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளருமான அன்வர் முஸ்தபா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அம்பாரை மாவட்டத்தில் உள்ள கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை ஆகிய கல்வி வலயப் பாடசாலை மாணவர்களுக்கடையில் நடத்தப்பட்ட பரீட்சையில் சுமார் 5,000 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதில் 500 மாணவர்கள் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 300 மாணவர்களுக்கு பலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது. அபத்து மாதங்களைக் கொண்டதாக இப்பயிற்சி நெறி நடைபெற்று வருகின்றது.
கடந்த ஆறு வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் 3,000 பேருக்கு சிம்ஸ் கெம்பஸினால் புலமைப்பரிசில் வழங்கப்பட்டு பாடநெறியை புர்த்தி செய்துள்ளனர்.
இந்நிகழ்வில் புலமைப்பரிசிலுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
2 hours ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
9 hours ago