2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

விபத்தில் படுகாமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Thipaan   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணல்சேனையில் திங்கட்கிழமை (20) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையிலிருந்து சென்ற டிப்பர் வாகனமும் நட்பிட்டிமுனையிலிருந்து கல்முனை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும் கிட்டங்கி வீதியிலுள்ள மணற்சேனை கிராமத்தில் வைத்து நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் சென்ற இருவர் படுகாயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .