2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அரசாங்க வைத்தியர்களுக்கான விசேட கொடுப்பனவு அதிகரிப்பு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அரசாங்க வைத்தியர்களுக்கான மாதாந்த விசேட கொடுப்பனவு இந்த (ஏப்ரல்) மாத தொடக்கம் 35,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சுதேச வைத்திய அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தக் கொடுப்பனவு, முன்னர் 25,000 ரூபாவாக இருந்தது. இது தொடர்பான சுற்றறிக்கை சுகாதார சுதேச வைத்திய அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர் ஆர்.பி. திஸநாயக்காவினால்  ஒப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவு பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

புதிய சுற்றறிக்கையின்படி ஏப்ரல் மாதம் தொடக்கம் அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாவுடன் மொத்தம் 35,000 ரூபாவை அரசாங்க வைத்தியர்கள் விசேட மாதாந்த கொடுப்பனவாக பெறுவார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .