2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கர்ப்பிணித்தாய்மாருக்கு சத்துணவு

Gavitha   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர்

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள, நாட்டில் மூளைப் பலமும் உடல் ஆரோக்கியமும் உள்ள மக்கள் சக்தியை உருவாக்கும் செயற்றிட்டத்துக்கேற்ப கர்ப்பிணித்; தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் திங்கட்கிழமை (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிறுவர்கள் விவகார இராஜாங்க அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்நிகழ்வில், இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான சத்துணவு பொதிகள் 155 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

கருவுற்று 05ஆம் மாதத்திலிருந்து குழந்தை பிறந்து 04 மாதங்கள் முடியும் வரையான 10 மாதங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான சத்துணவு பொருட்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .