2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் காயம்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபையினர் காரைதீவு விசேட அதிரடிப்படை முகாமுக்கு முன்னால் மின்சார திருத்த வேலையில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கவனயீனம் காரணமாக காரைதீவு விசேட அதிரடிப்படை முகாமுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான வாகனத்தின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி காயங்களுக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தினால் மோட்டார் சைக்கிள் பாரிய சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .