2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தமிழர்களின் பண்டிகைகளும் விழாக்களும் உன்னதமான அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன

Sudharshini   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.காரத்திகேசு

தமிழர்களின் விழாக்களும் பண்டிகைகளும் உயர்ந்த உன்னதமான அர்த்தங்களையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் மக்களுக்கு புகட்டி நிற்கின்றன. அந்தவகையில் சித்திரைப் புதுவருட பண்டிகையும் எமக்கு பல விடையங்களை கற்பிக்கின்றன.

இவைகளை இன்றைய சந்ததியினர் சிறப்பாக கடைப்பிடிப்பதன் ஊடாக அடுத்து வரும் சந்ததியிருக்கு கொண்டு செல்ல முடியும். இதற்காக நாம் அனைவரும் எமது பாரம்பரிய பண்பாடுகளை பேணி பாதுகாத்து கடைபிடிப்பதுக்காக பாடுபட வேண்டுமென திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேச செயலகமும் திவிநெகும திணைக்களமும் இணைந்து, தங்கவேலாயுதபுரம் மீள்குடியேற்ற கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கலந்தகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

தமிழர்களின் பாரம்பரிய கிராமிய விளையாட்டுக்கள் இன்றைய சமுகத்துக்கு தெரியாமல் அழிவடைந்து கொண்டு வரும் நிலைமையை காணக்கூடியதாக உள்ளது.  எனவே, எமது விழாக்களும் சரி பண்பாடுகளும் சரி காலம் காலமாக பேணி அதன் மகத்துவங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமையும் பொறுப்புக்களும் இன்றைய சந்ததியினருக்கு உண்டு என்பதனை மறந்து விடக்கூடாது.

எனவே, நாம் பாரம்பரிய பண்பாடுகளையும் காலசாரத்தையும் எதிர்கால சந்ததியிருக்கு கொண்டு செல்வதற்காக அனைவரும் பாடுபட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், திவிநெகும திணைக்களத்தின் புலனாய்வு அதிகாரிகள், திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .