2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கணித வாரம் ஆரம்பம்

Thipaan   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அக்கரைப்பற்று வலயக்கல்விப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலயத்தில், கணித வாரம் இன்று புதன்கிழமை (22) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் ஏப்ரல் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை கணிதவாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

பாடசாலை கணித மேம்பாட்டு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கணிதவார நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வு எதிர்வரும் 24ஆம் திகதி முழு நாள் நிகழ்வாக மிக விமர்சையாக பாடசாலையில் இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு இக்காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே கணித வினா விடைப் போட்டி, கணித குறும்பரீட்சை, கணிதவியலாளர்கள் பறறிய பேச்சுப் போட்டி, விவாதப் போட்டி, கணித விளையாட்டுக்கள் போன்ற பலவகை போட்டி நிகழ்வுகள் பாடசாலையில் இன்று முதல் நடைபெற்று வருகின்றன.

கணிதவாரத்தையொட்டி பாடசாலையில் அதிபர் எம்.சரிப்தின் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வுக்கு அக்கரைப்பற்று வலயக்கல்விப் பிரிவு கணிதபாட ஆசிரிய ஆலோசகர் ஏ.எல்.முஸ்தபா, பிரதி அதிபர்களான எம்.எல்.எம்.இஸ்மாயில், ஏ.எல்.யாசின், உதவி அதிபர் ஐ.எல்.ஜலால்தீன் மற்றும் வலயத்தலைவர்கள்,உதவி வலயத்தலைவர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .