2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மாணவர்களின் கணித அறிவை வளர்க்க வியாபார கடை திறப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

கணித வாரத்தை முன்னிட்டு புதன்கிழமை (22) அல் - அஷ்றக் தேசிய பாடசாலையில் மாதிரி மலிவு விற்பனை வியாபார கடையொன்று அதிபர் எம்.எஸ்.எம்.ஜாபிரால் திறந்து வைக்கப்பட்டது.

விற்பனை வியாபாரக் கடை மூலம் சதவீதம், கழிவு, குறித்த விலை, விற்பனை விலை போன்ற கணிதத்துடன் சம்பந்தப்பட்ட விடயங்களை  மாணவர்கள் கற்கும் வாய்ப்பு இதன்மூலம் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைக் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை நேரடியாக அறிமுகப்படுத்துவதன் ஊடாக, மாணவர்கள் பின்னரான காலப்பகுதியில் இத்துறைகளில் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .