2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை என்று ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் மோட்டார் சைக்கிள் தமக்கும் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச கிராம உத்தியோகஸ்தர்கள் திருக்கோவில் பிரதேச செயலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்று புதன்கிழமை (22) மேற்கொண்டனர்.

இக்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம உத்தியோகஸ்தர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

அரச வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கு மானிய அடிப்படையில் அரசாங்கத்தினால் மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சில கிராம உத்தியோகஸ்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டும் அதிகமானோருக்கு இன்னும் வழங்கப்படாமலும் அரசாங்கம் ஏமாற்றி இழுத்தடிப்புச் செய்துவருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த விடயமாக அம்பாறை மாவட்ட செயலாளருக்கு எமது சங்கம் பல முறை முறைப்பாடுகள் மூலம் எடுத்துக் கூறியும் காத்திரமான எந்தவிதமான நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளதாக தெரியவில்லை.

அரசாங்கத்தினால் வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்படும் மோட்டார் சைக்கிள் திட்டம் உரிய முறைப்படி மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கிராம சேவை அதிகாரிகள் கடந்த கால யுத்த சூழ்நிலையிலும் பல்லாண்டு காலமாக பல அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் சேவையாற்றி வந்துள்ள போதிலும் அரசாங்கத்தினால் கொண்டுவந்துள்ள இவ்வாறான நன்மை தரும் விடயங்கள் கிடைக்காமல் போவதையிட்டு மிகுந்து கவலை தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .